10ம் வகுப்பு தேர்வு: தமிழ், ஆங்கிலம் தேர்வு நேரம் மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 26 Dec, 2018 10:01 pm
10th-board-exams-language-exams-time-changed

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையில் மொழிப் பாடங்களுக்கான 4 தேர்வுகளின் நேரத்தை, காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணிக்கு மாற்றியுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி முதல் துவங்குகிறது. தேர்வுகள் வழக்கம் போல, காலை 10 மணி முதல் பகல் 12.45 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தமிழ் முதல் பாகம், இரண்டம் பாகம் மற்றும், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய 4 தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 4.45 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் விருப்ப பாடம் ஆகியவை வழக்கம் போல, 10 மணிக்கு துவங்கி பகல் 12.45க்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close