கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 01:18 pm
pregnant-lady-get-hiv-blood-hc-takes-case-voluntarily

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த விவகாரத்தில் ஜனவரி 3ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரத்தச் சிவப்பணு குறைபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த ரத்தத்தில், எச்ஐவி இருந்துள்ளது பின்னர் தான் தெரிய வந்தது. 

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. முறையாக பரிசோதிக்காமல் ரத்தத்தை ஏற்றிய அரசு மருத்துவமனை  மீது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சாத்தூர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ஜனவரி 3ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close