தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 01:20 pm
hiv-infection-blood-donated-youth-attempt-suicide

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற, எச்ஐவி தொற்றுடைய ரத்தத்தை தானம் செய்த இளைஞருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், சிவகாசி பட்டாசு ஆலையில் வேலைபார்த்த போது தனது உறவு பெண்ணுக்காக ரத்தம் தானம் செய்துள்ளார். ஆனால் அந்த ரத்தம் அவருக்கு வழங்கபடவில்லை. 

இதனிடையே மதுரையில் ரத்த பரிசோதனை செய்த இளைஞர் தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்து உடனே சிவகாசி ரத்த வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு அந்த ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உட்பட மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கர்ப்பிணி பெண் பாதிப்புக்குள்ளானது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணயால் மனமுடைந்த ரத்த தானம் செய்த வாலிபர் எலி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை பெற்றேர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரிடம் மேலும் பலர் விசாரணை நடத்தியதால், மன வேதனை அடைந்த அவர் நான் சாகப்போகிறேன் என கூறி தன் உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை கழற்றி வீசினார். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது. 

இதையடுத்து மீண்டும் தற்கொலை முயற்சி செய்யக்கூடும் என்பதால் அந்த வாலிபரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close