12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 04:28 pm
plus-two-exam-time-changed

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார். 

வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்த நடைமுறை கடந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது. 

அதே நேரத்தில் மறுதேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு பழைய நடைமுறை பொருந்தும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close