சிஎஸ்கேவில் இருந்ததால் தான் வெற்றிகளை குவிக்க முடிந்தது: தோனி

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 08:50 am
chennai-super-kings-were-able-to-accumulate-a-lot-of-victories-dhoni

சென்னை அணியில் இடம்பிடித்ததன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு கிரிக்கெட்டில் பல்வேறு வெற்றிகளை குவிக்க முடிந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில்,  இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசனின்  50 ஆண்டுகால கிரிக்கெட் அனுபவம் குறித்த (DEFYING THE PARADIGM) புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகத்தை வெளியிட, அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பெற்றுக்கொண்டார். 

அப்போது பேசிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "ஸ்ரீனிவாசன் கடின உழைப்பால் முன்னேறியவர் என்றும் தமிழகத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவித்தவர் என்றும் புகழாரம் சூட்டினார். 

தொடர்ந்து பேசிய கிரிக்கெட் வீரர் தோனி,  "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது எனவும், இதன் மூலம் கடின உழைப்புடன் கூடிய நிதானமான ஆட்டத்தை என்னாள் வெளிப்படுத்த முடிந்ததாகவும் கூறினார். மேலும், இதுவே என்னுடைய பல்வேறு வெற்றிக்கும் சாத்தியமானது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், கபில்தேவ், கவாஸ்கர், டிராவிட், கும்ளே, சேவாக், விவிஎஸ், யுவராஜ் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். சென்னையில், கிரிக்கெட் போட்டி அல்லாது தனியார் நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒரே இடத்தில் சங்கமித்தது இதுவே முதல் முறையாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close