'அவருக்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது' - சட்டசபையில் துரைமுருகன் உருக்கம்!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 12:09 pm
dmk-duraimurugan-speech-at-assembly

எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன், சட்டசபையில் கருணாநிதி இரங்கல் தீர்மானத்தின் மீது மிகவும் உருக்கமாக, கண்ணீர் மல்க பேசினார்.

நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் 2வது நாளான இன்று, மறைந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கருணாநிதி ஆகியோருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

முதலில் துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசினார். பின்னர் தொடர்ந்து பேசிய துரைமுருகன், "2007-ல் மடிந்திருந்தால் என் உடல் மீது கலைஞரின் கண்ணீர் விழுந்திருக்கும். எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் கருணாநிதி. என் மரணத்திற்கு கருணாநிதி கண்ணீர் விடுவார் என நினைத்தேன், ஆனால் அவர் மரணத்திற்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது. 

தனது பிளைகளை விட எனக்கு அதிக உரிமை தந்தவர் கலைஞர். எந்நாளும் தமிழர் மனங்களில் இருப்பவர் கலைஞர்" என்று உருக்கமாக கண்ணீர் மல்க பேசினார். 

துரைமுருகன் அழுததையடுத்து அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close