திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடையில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 01:01 pm
madras-hc-rejected-the-plea-against-thiruvarur-byelection

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் கஜா புயலால் பதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கஜா புயல் பதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்துவது என்பது சரியாக இருக்காது. எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என விவசாயி சத்தியநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். 

இந்த மனு மீது இன்று நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில், தேர்தலுக்கு தடை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், தேர்தலுக்கு தடை கோரும் மற்றொரு மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close