ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவக்குழு அமைக்க வேண்டும்; அப்பல்லோ வழக்கறிஞர்

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 03:18 pm
the-medical-council-should-be-set-up-at-arumugamasi-commission-apollo-lawyer

மருத்துவக்குழு அமைக்கப்பட்டால் மட்டுமே அப்பல்லோ மருத்துவர்கள் அளிக்கும் தகவல்களை முறையாக பதிவு செய்ய முடியும் எனவும், அதுவரை அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராக மாட்டார்கள் எனவும், அப்பல்லோ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், " அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்காக இன்று ஆஜராகும் படி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆணையத்தில் ஆஜராகும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்யப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட முழு சிகிச்சை விவரங்களை வழங்கியுள்ளோம். மருத்துவம் குறித்த விவரங்கள் தெரியாமல் ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர். 

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கவில்லை. பல்வேறு விருதுகள் பெற்ற மருத்துவர்களான ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை வழங்கினர். மருத்துவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள்,  ஆணையத்தால் தவறாக பதிவு செய்யப்படுவதை தவிர்க்க மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதமே மனு  அளித்திருந்தோம். இப்போதும் அதையே தான் கேட்டுள்ளோம்.

ஆணையம் சார்பில் மருத்துவக்குழு அமைக்கப்படும் வரை அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராக மாட்டார்கள், எனவே,  வேறு ஒரு நாளில் மருத்துவர்களுக்கு சம்மன் அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close