வேதா இல்லத்தை ஜெ. நினைவிடமாக மாற்ற ஏதேனும் ஆட்சேபணையா? - நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 02:01 pm
vedha-illam-case-hearing-in-madras-high-court

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு வரித்துறைக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மெட்ராஸ் 'ஸ்கூல் ஆப் சோசியல் நெட்ஒர்க்'  என்ற அமைப்பு சென்னை தேனாம்பேட்டையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், ஜெயலலிதா வரிமான வரி செலுத்தாமல் ஏதும் பாக்கி வைத்துள்ளரா? வேறு ஆட்சேபனை ஏதும் உள்ளதா ? வருமான வரிதுறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close