திருவாரூர் தொகுதியில் திமுகவுக்கு மார்க். கம்யூ. ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 03:04 pm
thiruvarur-election-marxist-communist-supports-dmk

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதிக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் தி.மு.க தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி வருகிற ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

கருணாநிதியின் தொகுதி என்பதால் திமுக சார்பில் இதில் ஸ்டாலின் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் தான் போட்டியிட வாய்ப்பில்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், திமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close