கோவை, நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்கள்!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 06:52 pm
indian-railways-announced-special-train-to-jabalpur-from-tvl-and-coimbatore

கோயம்புத்தூர் - ஜபல்பூர் மற்றும் திருநெல்வேலி -ஜபல்பூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களில் இயக்கப்பட உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 

பயணிகள் கூட்டநெரிசலை தவிர்க்க இந்திய ரயில்வே அவ்வப்போது கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி இரண்டு வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

1. கோயம்புத்தூர் - ஜபல்பூர்

வண்டி எண். 02197 - 2019 ஜனவரி 7, 14, 21, 28 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் இருந்து 19.05 மணிக்கு புறப்படும் ரயிலானது ஜபல்பூருக்கு புதன்கிழமை காலை 10.20 மணிக்கு சென்றடையும். 

பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், பையனூர், மங்களூர், உடுப்பி, கர்வார், ரத்னகிரி, கேத், ரோஹா, இகட்புரி, இடார்ஸி, பிபரியா, காடார்வாரா மற்றும் நரசிங்கர்பூர் வழியாக செல்லும். 

2.  திருநெல்வேலி -ஜபல்பூர்

வண்டி எண். 02193 - 2019 ஜனவரி 5, 12, 19, 26 மற்றும் பிப்ரவரி 2 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து 16.00 மணிக்கு புறப்படும் ரயிலானது திங்கட்கிழமை 11.15 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும். 

இது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலர்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், ஓன்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், ராமகுண்டம், சிபர்கர்காஸ்நகர், பாலர்ஷா, சந்திரபூர், சேவக்ரம், நாக்பூர், இடார்ஸி, பிபரியா, காடார்வாரா மற்றும் நரசிங்கர்பூர் வழியாக செல்லும். 

இந்த இரண்டும் சிறப்புக்கட்டண ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close