சென்னையில் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 11:33 am
book-exhibition-starts-today-at-chennai

சென்னையின் 42வது புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கிவைக்கிறார். இன்று தொடங்கும் கண்காட்சி வருகிற ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. 

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 42வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று தொடங்க இருக்கிறது.  820 அரங்குகள், சுமார் 1.5 கோடி புத்தகங்களுடன் இந்த பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி 20ம் தேதி வரை நடக்கிறது.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். மேலும்,  இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சிறப்புரையாற்றுகிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதற்காக மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1.5 கோடி புத்தகங்கள் இடம்பெறுகின்றன.  10% தள்ளுபடியுடன் புத்தகம் விற்பனை செய்யப்படவுள்ளது. வார நாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. நுழைவுக்கட்டணம் ரூ.10. இந்த ஆண்டு முதல்முறையாக நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.bapasi.com என்ற இணையதளத்தில் நுழைவுசீட்டு பெறலாம். அனைத்து நாட்களும் புத்தகக் காட்சியை பார்வையிடுவதற்கான நுழைவு பாஸ் கட்டணம் ரூ.100.

புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம், இலவச வைஃபை, செல்போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் தினமும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பல்வேறு எழுத்தாளர்களும், பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேச உள்ளனர். அதேபோன்று இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படம், ஆவணப் படங்களை திரையிட தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close