டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஓர் நற்செய்தி! குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 03:55 pm

tnpsc-group-1-2019-notification-out

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியிடங்களை நிரப்ப குரூப் 4, குரூப் 2, குரூப் 1 என பல்வேறு படிநிலைகளில் தேர்வுகளை நடத்தி காலிப்பாணியிடங்களை நிரப்பி வருகிறது. 

இந்த சூழ்நிலையில் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டு குரூப் 1 (Tamil Nadu Combined Civil Services- Group 1) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 139 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 139

விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜனவரி 3, 2019

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி 31, 2019

ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜனவரி 31, 2019

வங்கிகள் மூலமாக விண்ணப்பம் செலுத்த கடைசி தேதி: பிப்ரவரி 2, 2019

விண்ணப்பிக்க தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21. அதிகபட்ச வயது 37. பொது பிரிவினருக்கு 32 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: மார்ச் 3, 2019

இந்த தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு. முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். பின்னர் அதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

இதர விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை காணவும். 

முன்னதாக, 2014–16–ம் ஆண்டுக்கான குரூப்–1 தேர்வு 85 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. 

அதில் வெற்றி பெற்ற 176 விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியானது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

newstm.in

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.