திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 04:09 pm
thiruvarur-byelection-ammk-candidate-announced-today

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

வருகிற ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் சார்பில் வேட்பாளரை தேர்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று தஞ்சையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை டிடிவி தினகரன் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், 

இவர் திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளராக இருக்கிறார். முன்னதாக, அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். மேலும் இவர் சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close