பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளைய தினம் கடைசி வாய்ப்பு ..! 

  டேவிட்   | Last Modified : 04 Jan, 2019 07:49 pm
last-chance-for-plus-two-students

பிளஸ்-2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்களுக்கு 05.01.2019 (சனிக்கிழமை) அன்று தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்கள், மீண்டும்  தேர்வு எழுத விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்றாலோ? அல்லது தேர்வு எழுத முடியாமல் போனாலோ?  அவர்களின் பழைய மதிப்பெண் பட்டியல் செல்லாது என்றாகிவிடும். அடுத்த ஆண்டு முதல் அவர்கள் புதிய பாடத்திட்டத்தின் படி பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு இரண்டு ஆண்டுகள் பொதுத் தேர்வு எழுத வேண்டும். இதுவே கடைசி வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close