கஜா புயல்; மீனவ படகுகளுக்கு இழப்பீடு அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 08:25 pm
gaja-cyclone-compensation-hiked-for-fishing-boats

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் 52 பேர் உயிரிழந்ததாகவும், மீனவர்கள் இழந்த படகுகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும் தொகை ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம், தமிழகத்தின் கரையோரப் மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியது. இதனால் நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். புயல் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகள் பற்றி விளக்கமளித்தார். அரசின் துரிதமான நடவடிக்கைகளால் பலி எண்ணிக்கை பெரிய அளவில் குறைக்கப்பட்டதாக கூறினார். 81,948 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்று கூறினார்.

புயலால் 52 பேர் பலியானதாகவும், 5.27 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாவும், 2,21,485 மாடுகள் மற்றும் பறவைகள் அழிந்ததாகவும், 1,22,063 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்தார். 3,31,772 மின் கம்பங்கள், 655 ட்ரான்ஸ்பார்மர்கள், 201 துணை மின் நிலையங்கள்,ஆயிரம் கிலோமீட்டர் கணக்கிலான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

5,662 மீனவ படகுகள், 6,157 படகுகள், 10,648 மீன் வலைகளும் இதில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கஜா புயலில் தங்களது படகுகளை இழந்த மீனவர்களுக்கு அறிவித்திருந்த 85,000 நிவாரணம், ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close