திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா? தேர்தல் ஆணையம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 09:44 pm
can-election-be-held-in-thiruvarur-election-commission-questions

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு இடையே, திருவாரூர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என டி. ராஜா தொடுத்த மனுவை தொடர்ந்து, தேர்தல் நடத்த முடியுமா, என திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால், நிவாரணப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தார்.

அதனால், இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்த முடியுமா என தேர்தல் ஆணையம் திருவாரூர் தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close