பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 05:31 am
16-convicted-in-thittakudi-school-girls-trafficking-case

திட்டக்குடியில் பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், பாதிரியார், 8 பெண்கள் உட்பட 16 பேர் குற்றவாளிகள் என கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த 13 வயதேயான 2 பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் கடத்தி, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது. அவர்களிடமிருந்து தப்பிய அந்த சிறுமிகள், போலீசாரிடம் சென்று நடந்தவற்றை கூறினர். இந்த வழக்கில் அந்த பகுதியை சேர்ந்த பாதிரியார் அருள்தாஸ் என்பவரும் குற்றம் சாட்டப்பட்டதால், சர்ச்சை எழுந்தது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இருவர் எற்கனவே தலைமறைவாகியுள்ளனர். கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், 17 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை மட்டும் நீதிபதி விடுவித்தார். மற்ற 16 பேரின் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை வரும் 7ம் தேதி தெரிவிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close