மீனவ மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 11:30 am
tn-govt-gives-coaching-for-ias-exam-to-fishermen-family-students

மீனவ மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "மீனவ மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீனவ மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் பொருட்டு, ஏற்கனவே கடற்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மீனவ மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மீனவ மாணவர்களில் ஆண்டுக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும்" என அமைச்சர் தெரிவித்தார். 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close