3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:00 pm
the-income-tax-raid-for-the-3rd-day

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4  நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிகபடியான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, சரவண பவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் ஆகிய 4 உணவு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் கிளைகள் என மொத்தம் 32 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 3ஆம் தேதி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையானது 3வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களும், கோப்புகளும் கிடைக்கும் பட்சத்தில், பிற மாநிலங்களில் உள்ள அந்நிறுவனங்களின் கிளைகளிலும் சோதனை மேற்கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close