தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் அமைக்க அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்துள்ளது: அமைச்சர் சி.வி.சண்முகம்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:11 pm

the-government-has-set-up-a-law-to-set-private-law-colleges-in-tamil-nadu-minister-cv-shanmugam

தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் அமைக்க அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்துள்ளதாக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில், இன்றைய கேள்வி நேரத்தின் போது,  தஞ்சையில் அரசு சட்டக் கல்லூரிகள் இல்லை எனவும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டையில் சட்டக் கல்லூரிகள் அமைக்க அரசு முன் வருமா? எனவும் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழகத்தில் 10 சட்டக்கல்லூரிகள் இயங்கி வருவதாகவும், ஒரே ஆண்டில் 3 சட்டக்கல்லூரிகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததையும் குறிப்பிட்ட அவர், எந்தெந்த  மாவட்டங்களில் சட்டக்கல்லூரிகள் இல்லையோ அந்த மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறினார்.  மேலும், தனியார் கல்லூரிகள் சட்டக்கல்லூரி அமைக்க முன்வந்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல், பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள கிளை சிறைச்சாலைகளை ஊருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், "சிறை துறையின் மூலம் கணக்கெடுப்பு நடத்தி ஊருக்கு வெளியே சிறைச்சாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஊருக்கு வெளியில் அமைத்தால் மிகப்பெரிய அளவில் சிறைச்சாலை அமைப்பதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.