திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாமா? - இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 12:03 pm
thiruvarur-by-election-update

திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தரவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். 

தி.மு.கவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைவையடுத்து, காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதாவது, கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால், தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் அளித்த மனுவில் கூறியுள்ளார். 

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்த நிலையில் விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து தற்போது, திருவாரூரில் இடைத்தேர்தலை தற்போது நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர மத்திய தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையை இன்று மாலைக்குள் தர வேண்டும் என்றும் தற்போது தேர்தல் ஆணைய தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையின் அடிப்படையிலே திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் என அனைவரின் கருத்துகளையும் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என திமுக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close