எல்.இ.டி விளக்குகளால் அரசுக்கு ரூ.286.83 கோடிக்கு மின்சேமிப்பு! - அமைச்சர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 12:44 pm
minister-sp-velumani-press-meet

தமிழகம் முழுவதும் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.286.83 கோடிக்கு மின்சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார். 

அப்போது அவர், எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.286.83 கோடிக்கு மின்சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  ஊரகப்பகுதிகளில் ரூ.120 கோடியும், நகர்ப்புறப் பகுதிகளில் ரூ.116 கோடியும், பெருநகர மாநகராட்சிகளில் ரூ.88 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார். 

மேலும், சென்னை மாநகருடன் இணைந்த 42 உள்ளாட்சிப்பகுதிகளில் ரூ.1128.25 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close