நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு உறை பனி தொடரும்: சென்னை வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:17 pm
chennai-meteorological-center-report

நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல்  மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும். அதே போல் நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளில் தற்போது நிலவி வரும் உறை பனி அடுத்த இரண்டு இரவுகள் தொடரும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாபுக் புயல் அந்தமான் கடற்பகுதியை இன்று அடைய உள்ளது. அது அங்கிருந்து நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கிறது. இதனால் எந்த மாற்றமும் தென் இந்திய பகுதிகளில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. குறைந்தபட்ச வெப்பநிலை: உதகை 7.4 டிகிரி செல்சியஸ், வால்பாறையில் 3.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close