எச்.ஐ.வி விவகாரம்: இனிமேல் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறாது -அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 12:45 pm
tn-assembly-minister-vijayabaskar-speech

எச்.ஐ.வி தொற்றுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரி பரிசோதனை தான் மேற்கொண்டு வருகிறோம் என்றும் தமிழகத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை  நடைபெற்று வருகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு 24 மணி நேர முழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருவில் வளரும் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படா வண்ணம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக  முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான 2 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சோதனைகளை கடந்து தவறு நிகழ்ந்துள்ளது. இனிமேல் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறாது" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close