சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்..!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:37 pm
advance-reservation-for-special-fares-train

மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாளையொட்டி தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மகாசிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களை இயக்குவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி, ரயில் எண் : 06007 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜன.05,12,19,26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 7 மணிக்கு இயக்கப்படுகிறது.

 ரயில் எண் : 06008 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், ஜன 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. 

இதேபோல், ரயில் எண் : 06005 சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு ரயில், மார்ச் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட உள்ளது. 

ரயில் எண் : 06006 எர்ணாகுளம் சந்திப்பு - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், மார்ச் 03, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து மாலை 07 மணிக்கு புறப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close