தொழிலதிபர் ரன்வீர் ஷா திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜர்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:46 pm
businessman-ranveer-shah-is-in-azar

சிலை கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா  திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்றுஆஜராகி கையெழுத்திட்டார்.

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீடு மற்றும் பண்ணைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பழமையான கற்சிலைகள் உட்பட 223 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து ரன்வீர் ஷாவின் தோழியான கிரண் ராவின் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 23 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 

இந்நிலையில், தலைமறைவாக இருந்த இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிலைகள் பதுக்கல் குறித்த வழக்குகளில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையுடன்,  இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கிரண் ராவ் தனது வழக்கறிஞர்களுடன் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று கையெழுத்திட்டார். இந்நிலையில் ரன்வீர் ஷா  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் டி.எஸ்.பி சந்திரசேகர் முன்னிலையில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close