பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:20 pm
pongal-festival-tn-govt-special-gift-to-people

சிறப்பு பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தில்  ஏதேனும் முறைகேடு நடந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் ன் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை துவங்கி வைக்கிறார். வரும் திங்கள் கிழமை முதல் அந்ததந்த பகுதிகளின் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தில் ஏதேனும் முறைகேடு நடந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், "பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். கவரில் கொடுக்காமல் பணத்தை வெளிப்படையாக வழங்க வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதனை கண்காணிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு சென்று சேர்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் இதனை எளிமையாக பெற வழிவகை செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close