திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:31 pm
thiruvarur-byelection-update

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இதனால் திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என கூறப்படுகிறது. 

திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில்  தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

இந்த நிலையில், கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இதற்கிடையே திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தரவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இதனால் திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close