மக்களின் நம்பிக்கைக்குரிய ஆணையமாக தேர்தல் ஆணையம் செயல்படவில்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 04:44 pm
election-commission-is-not-acting-as-a-trusted-authority-of-the-people-mutharasan

தேர்தல் ஆணையம் தற்போது மக்களின் நம்பிக்கைக்குரிய ஆணையமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது நல்லதாக அமையாது. இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ள நிலையில் தற்போது திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தல் நடத்துவது ஏன்? திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏன் தேர்தல் நடத்த வில்லை.

தேர்தல் ஆணையமானது மக்களின் நம்பிக்கைக்குரிய ஆணையமாக தற்போது செயல்படவில்லை. ஜனநாயகத்தின் கடமையை மீறி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ள தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலாக உள்ளது" என தெரிவித்தார்.

மேலும், நீர்ப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு செயல்பட்டு வரும் நிலையில்,  சேலம் மாவட்டத்தில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலத்தாம்பட்டி ஏரியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட 50 கோடி நிதி  ஒதுக்கி அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பங்கேற்பது வேடிக்கையாக உள்ளது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுக்கச் சென்றபோது சேலம் மாவட்ட ஆட்சியர் அந்த ஏரி அந்த பகுதியில் எங்கு உள்ளது என கேள்வி கேட்டிருப்பது அதைவிட வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close