திருப்பாவை-22 “அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான...

  சாரா   | Last Modified : 27 Dec, 2019 09:40 am
thiruppaavai-22

உலகத்தை முழுவதும் தன் குடைக்குக் கீழே கொண்டு வந்து விடுவேன் ஏன்று வீரமும் வேகமும் கொண்ட பெரிய பெரிய மன்னர்கள் கூட இறுதியில் உண்மை புரிந்து அல்லது தங்கள் இயலாமையால் உன் சயனித்திருக்கும் போது உன் திருவடியின் அருகில்  வந்து அடைக்கலமாகக் கூடியிருப்பார்கள். அதே போல நாங்களும் உன் பள்ளியறையில் கூடி நிற்கிறோம். உன் திருப்பள்ளியெழுச்சியைக் காணும் ஆவலில்.

அது ஏன் பள்ளிகொண்டிருக்கும் போது என்று கோதை நாச்சியார் குறிப்பிடுகிறார் என்றால், கிருஷ்ணர் போர்க் கோலம் கொண்டதைக் கண்டு பயந்து போய் கூட அல்ல. தானே முயன்று பார்த்து முடியாமல் போனதால் தம் திறன் என்ன, கிருஷ்ணரின் ஆளுமையும் அவரின் திறனுயரங்களையும் உணர்ந்த்உ விட்டனர். ஆகையால், கிருஷ்ணர் சயனித்திருக்கும் போதே கூட்டம் கூட்டமாக வந்து சரணடைந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பது ஒரு கருத்தாகவும், 

ஆனானப்பட்ட அர்ஜுனனும், துரியோதனனும் பாரதப் போருக்கு முன்பு உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் தயவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர் என்பதாகவும் கொள்ளலாம்.

உன்னைப் பள்ளியெழுப்ப பயன்படும் கிண்கிணிகள் கூட செந்தாமரைப் போன்ற உன் கண்களை ஒப்ப இருக்கிறது. உன்னைப் போலவே விழித்தும் விழிக்காமலும் அரைப் பார்வையுடன் இருக்கின்றது. மெல்ல விழிக்கத் தொடங்கிய அந்த பார்வை எங்கள் மீது விழாதோவென்று காத்திருக்கிறோம்.

உந்த கண்களில் ஒன்று சூரியன் போலவும் மற்றொன்று திங்கள் போன்றும் அற்புதமாக இருக்கிறது சூரியன் போன்ற கண்கள் மூலம் எங்கள் பாவங்களை நீக்கி, சந்திரன் போன்ற கண்களால் எங்கள் மீது உன் அருளைப் பொழிவாயாக. 

“அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.”

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close