திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? - ஆட்சிமன்றக்குழு கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 05:02 pm
aiadmk-meeting-starts-for-thiruvarur-byelection

திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய அதிமுக சார்பில் இன்று ஆட்சிமன்றக்குழு கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஒருபக்கம் தொடங்கிய நிலையில், மற்றொரு பக்கம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

ஏற்கனவே திமுக, அமமுக கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் அதிமுக சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் போட்டியிடப்போகிறார் என்பது குறித்து முடிவு செய்ய இன்று ஆட்சிமன்றக்குழு கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close