திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு வரும் திங்கட்கிழமை விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 06:13 pm
thiruvarur-byelection-update-sc-hearing-on-monday

கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா அளித்த மனு மீது உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்துகிறது. 

திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி, ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால்  திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும், தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். 

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை (ஜன.7) நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close