ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு - முதல் நாள்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 08:29 pm
samaskrutha-bharathi-conference-in-trichy

திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில், ஸம்ஸ்க்ருதபாரதி மாநாடு இன்று துவங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த மாநாட்டில், சமஸ்க்ருத மொழியின் தனித்தன்மையையும், பன்முக மேன்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை ஸம்ஸ்க்ருதபாரதி மாநாட்டில், குடும்பத்தில் சமஸ்க்ருதத்தை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் ஸம்ஸ்க்ருதபாரதியின் தன்னார்வலர்கள், பல கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகளை ஒரு தாய் எப்படி, சமஸ்க்ருதம் கற்றுக்கொள்ள வைக்க ஊக்குவிப்பது என்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. 

பின்னர், மதியம் சமஸ்க்ருத இசை பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணன், சமஸ்க்ருதம் மற்றும் இசை பற்றி பேசினார். சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் இசையில் உள்ள ஒற்றுமை பற்றியும் அவர் பேசினார். 

மும்பை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கே.ராமகிரிஷ்ணன், சமஸ்க்ருத கல்வி பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அறிவின் ஆதியே சம்ஸ்க்ருதம் என்று கூறினார். நியாய சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், இசை போன்றவை, சமஸ்க்ருதத்தில் இருந்து உருவானவை என்று கூறினார். அதனால், சமஸ்க்ருதம் தெரியாமல் இவற்றை எப்படி நாம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்காக பல்வேறு எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி அவற்றுக்கு தமிழில் விளக்கமும் கொடுத்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close