ஜன.27ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை; முதல்வரை சந்தித்து பேசிய தமிழிசை!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 10:03 am
tamilisai-meets-cm-edappadi-palanisamy

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. 

சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "திருவாரூர் இடைத்தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். திருவாரூர் தேர்தலை சந்திக்க திமுகவே பயப்படுகிறது. தேர்தலை சந்திக்க ஸ்டாலினுக்கு பயம் இருக்கிறது. இடைத்தேர்தலைவிட மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்றார். 

மதுரை தோப்பூரில் அமையவிருக்கிற எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக வருகிற ஜனவரி 27ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருவதை முன்னிட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசவே முதல்வரை சந்தித்ததாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து அவர் வந்து சென்ற சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முதல்வரை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேர்தலுக்காக பிரதமரை சந்திக்கவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி குறித்து பேசினேன்" என்று தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close