ஜன.10ம் தேதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: தம்பிதுரை தகவல்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 09:41 am
admk-candidate-will-be-announced-on-jan-10-thambidruai-mp

திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என ஜனவரி 10ம் தேதி அறிவிக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததன் அடிப்படையில், வேட்புமனுத்தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதன்படி, முக்கிய கட்சிகளான திமுக சார்பில் பூண்டி கலைவாணன் டிடிவி தினகரன் அமமுக சார்பில் காமராஜ் களமிறங்குகின்றனர். அதிமுக வேட்பாளர் குறித்து முடிவெடுக்க, நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆட்சிமன்ற குழுக்கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்' என்று கூறினர். அதேபோன்று பாஜக சார்பில், இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து இன்று செய்தியர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, "திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என ஜனவரி 10ம் தேதி அறிவிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜனவரி 10 அன்றே அறிவிக்கப்படும்" என கூறியுள்ளார். 

newstm.in

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close