தேர்தலில் நிற்கும் யார் மீது தான் வழக்கு இல்லை? - தி.மு.க ஆ.ராசா

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 09:50 am
dmk-a-raja-press-meet-and-replied-about-thiruvarur-byelection

திருவாரூர் இடைத்தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது குறித்து எதுவோ கூற முடியாது என திமுக முன்னாள் எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

இன்று கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டது முன்னதாகவே தெரிந்த விஷயம் தான். தமிழக அரசு செயல்படாத அரசு' என்று விமர்சனம் செய்தார். 

தொடர்ந்து திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து எதுவும் கூற முடியாது என தெரிவித்தார். 

மேலும், திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவானன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த ஆ.ராசா, "யார் மீது தான் வழக்கு இல்லை. அவை அனைத்தும் பொய் வழக்குகள்' என பதிலளித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close