திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு - ஓபிஎஸ் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 12:19 pm
aiadmk-candidate-will-be-announced-tomorrow-ops

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

இன்று தேனியில் அரசு சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தின் நடுவே அவர் செய்தியாளர்களை அழைத்து பேசுகையில், "திருவாரூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும். நாளை காலை 9 மணி முதல்10.30 மணிக்குள் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வைத்து  வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

வழக்கமாக பத்திரிகையாளர்களை தாமாக முன் வந்து சந்திக்காத ஓ பன்னீர்செல்வம், இன்று தாமாகவே பத்திரிக்கையாளர்களை அழைத்து இந்தத் தகவலை கூறியுள்ளார். 

திமுக, அமமுக கட்சிகள் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக காலம் தாழ்த்தி வருவதாக அரசியல் விமர்சனங்கள் வந்ததையடுத்து துணை முதல்வர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து ஜனவரி 10ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close