திருவாரூர் தேர்தல் விதிமீறல்: அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது 80 வழக்குகள்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 01:34 pm
thiruvarur-byelection-update-80-cases-filed

திருவாரூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது மொத்தமாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வேட்புமனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில், திருவாரூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது மொத்தமாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி  சுவர் விளம்பரம்செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, திமுக, அமமுக கட்சி சார்பில் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதிமுக வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close