அதிமுகவுடன் இணைய விருப்பம் தெரிவித்த ஜெ.தீபா; வரவேற்ற ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 03:07 pm
j-deepa-wants-to-join-with-aiadmk-ops-invites

அதிமுகவுடன் இணையவே விருப்பம் என்று ஜெ.தீபா கூறியதையடுத்து,  ஜெ.தீபா உள்பட யாரையும் அதிமுக இணைத்துக்கொள்ள தயார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, "திருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. மாறாக திருவாரூர் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். தொண்டர்களிடம் கருத்து கேட்க இருக்கிறோம். அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளது" என்று தெரிவித்தார். 

பின்னர் இதுகுறித்து பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெ.தீபா உள்பட வேண்டுமானாலும் அதிமுகவில் இணைந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close