வேன்- கன்டெய்னர் லாரி மோதி ஓட்டுநர் உட்பட 10 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு !

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:05 pm

van-container-truck-collision-accident-7-people-dead

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 

ஆந்திராவை சேர்ந்த 15 பேர் கோவில் வழிபாட்டுக்கு சென்று விட்டு வேனில் ஊர் திரும்பியுள்ளனர். வேன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சாலை பிரிவில் வந்த போது, கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கன்டெய்னர் லாரி தவறான பாதையில் வந்ததால், இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.