தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:02 pm
van-container-truck-collision-accident-10-people-dead

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் காசிபேட் பகுதியை சேர்ந்த 15 பேர் சபரிமலை சென்று விட்டு வேனில் ஊர் திரும்பினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வந்தபோது, தவறான பாதையில் வந்த கன்டெய்னர் லாரி. வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை அமைச்சர் விஜபாஸ்கர் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இறந்தவர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close