அரசியலில் இறங்கும் பிரகாஷ்ராஜுக்கு கமல் வரவேற்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 06:32 pm
kamal-welcomes-prakash-raj-into-politics

அரசியலில் நுழைந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜை, நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேற்றுள்ளார்.

சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியின் அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், பாரதிய ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான் அரசியலில் இறங்க உள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் அவரது அரசியல் பிரவேசத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், பிரகாஷ்ராஜை அரசியலுக்கு வரவேற்றுள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் அவர், "எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி" என எழுதினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close