இடைத்தேர்தலில் திருவாரூர் கோட்டையை பிடிப்போம்: டிடிவி.தினகரன்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 07:15 pm
we-will-capture-the-tiruvarur-fort-in-the-election

ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றிபெற்றது போன்று திருவாரூர் தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது அப்பாவின் தொதியில் நடக்கும் தேர்தலில் போட்டியிட ஏன் பயமாக இருக்கிறது எனவும், ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு தொகுதியில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிட தைரியமில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.  

மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தே ஆக வேண்டும் என்றும் தற்போது தன்மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும்  தெரிவித்த அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது போன்று, கருணாநிதி  தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காமராஜர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைப்போம் என கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close