சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழா!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 06:08 am
hot-air-balloon-fest-lights-up-chengalpattu

செங்கல்பட்டு அருகே நேற்று நடைபெற்ற 5வது தமிழக சர்வதேச ராட்சத பலூன் திருவிழா, திரைநட்சத்திரங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள, கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

மகேந்திரா வேர்ல்டு சிட்டி, தமிழக சுற்றுலாத்துறை சேர்ந்து நடத்தும் 5வது தமிழக சர்வதேச ராட்சத பலூன் திருவிழா, செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று, இசைஞானி இளையராஜா, நடிகர் விஷால், நாசர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் இசைஞானி இளையராஜாவுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் விழாவுக்கான டிக்கெட்டுகள் விற்பனை, இந்த நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட்டது. இளையராஜா, விஷால், நாசர் ஆகியோர் ராட்சத பலூனில் ஏறி பயணம் செய்தனர்.

இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட வண்ண வண்ண ராட்சத பலூன்கள், வானை அலங்கரித்தன. இந்த நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ராட்சத பலூன் திருவிழா அடுத்த வாரம் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close