இடைத்தேர்தல் ரத்து: பாஜக, அதிமுக, திமுகவின் சதி - எஸ்.காமராஜ் 

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 10:01 am
cancellation-of-the-election

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது பாஜக, அதிமுக, திமுகவின்  திட்டமிட்ட சதி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28 -ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில்,இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இந்த முடிவை எதிர்ப்பார்ககவில்லை எனவும் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், தோல்வி பயம் காரணமாக தேர்தலை சந்திக்க அச்சம் கொண்ட அதிமுக, திமுக, பாஜகவின் திட்டமிட்ட சதி இது என  அவர் குற்றம்சாட்டினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close