திருவாரூரிலும் பொங்கல் பரிசு!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 10:36 am
pongal-gift-will-be-given-to-tiruvarur-tamilnadu-government

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூரிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனிடையே, "பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்" என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். மேலும், திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், அத்தொகுதி தவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் அவர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து,  பொங்கல் பரிசு தொகுப்பு திருவாரூரிலும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close