திருமயம் சாலை விபத்து: லாரி ஓட்டுநர் கைது

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 11:10 am
larry-driver-arrested-for-thirumayam-road-accident

திருமயம் அருகே நிகழ்ந்த சாலை விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, தெலுங்கானாவை சேர்ந்த 15 பேருடன் வந்த கொண்டிருந்த வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், வேனில் வந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டேங்கர் லாரி தவறான பாதையில் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான டேங்கர் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் மலைப்பாண்டியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close