தமிழகம்: 555 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் தொடங்கினார்..!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 11:58 am
services-started-in-555-new-buses

தமிழகத்தில் ரூ.140 கோடி செலவில் 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஏற்கனவே  இரண்டு கட்டமாக ரூ. 260 கோடி மதிப்பில் 986 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து இன்று தலைமைசெயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.140 கோடி செலவில் 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஏனையஅமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் சென்னைக்கு சிவப்பு நிறத்தில் 56 பேருந்துகளும், விழுப்புரத்திற்கு 82 பேருந்துகளும், சேலத்திற்கு 112 பேருந்துகளும், கும்பகோணத்திற்கு 102 பேருந்துகளும், கோவைக்கு 140 பேருந்துகளும், மதுரைக்கு 63 பேருந்துகளும்  என மொத்தம் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளில், தாரளமான இட வசதி, ஓட்டுனர் வசதிக்காக மி்ன் விசிறி, அலாரம், அவசர காலங்களில் எளிதில் வெளியேற இரு கதவுகள்  உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close