திருவாரூர் தேர்தல் வழக்கு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 11:47 am
cases-against-thiruvarur-by-election-closed-by-sc

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது. 

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவையடுத்து, அவரது திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வேட்புமனுத்தாக்கலும் தொடங்கி நடைபெற்று வந்தது. திமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். தொடர்ந்து இன்று காலை அதிமுக வேட்பாளர் அறிவிப்பு வெளியாக இருந்தது. 

இதற்கிடையே, திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கேற்ப, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல் ராஜ், அனைத்து கட்சிகளிடமும் கருத்துகேட்பு நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதில் திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்தி வைக்கும்படி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அறிக்கையின் அடிப்படையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தில், திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. தற்போது தேர்தல் ஆணையமே தேர்தலை ஒத்தி வைத்ததால் வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close